Category Archives: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் – ஆலயங்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

நரசிம்ம சாஸ்தா அங்கமங்கலம்
ஆயிரத்தெண் விநாயகர் ஆறுமுகமங்கலம்
ஆதிநாதன் ஆழ்வார் திருநகரி
கைலாசநாதர் இராஜபதி
சுப்ரமணியசுவாமி எண்கண்

சேர்மன் அருணாசல சுவாமி

ஏரல்

வெங்கடாசலபதி கருங்குளம்
கழுகாசலமூர்த்தி கழுகுமலை

கற்குவேல் அய்யனார்

காயாமொழி

வீரமனோகரி(காளி)

குலசேகரன் பட்டினம்

முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம்

பூவனாதர் (செண்பகவல்லி) கோவில்பட்டி
கைலாசநாதர் சேர்ந்தபூமங்கலம்
வைத்தமாநிதி பெருமாள் திருக்கோளூர்

சுப்பிரமணியசுவாமி

திருச்செந்தூர்

அரவிந்தலோசனர் திருதொலைவில்லி மங்கலம்
ஸ்ரீ நிவாசன் திருத்தொலைவில்லி மங்கலம்
பூமிபாலகர் திருப்புளியங்குடி
மகரநெடுங் குழைக்காதர் தென்திருப்பேரை
விஜயாஸனர் நத்தம், வரகுணமங்கை
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை
கைலாசநாதர் ராஜபதி
அலங்கார செல்வி அம்மன் வசவப்புரம்
புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் வனதிருப்பதி, புன்னை நகர்
வைகுண்டநாதர் (கள்ளபிரான்) ஸ்ரீ வைகுண்டம்
நதிக்கரை முருகன் ஸ்ரீவைகுண்டம்
மயிலேறும் பெருமான் சாஸ்தா ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம்

அருள்மிகு அன்னபூரணி உடனுறை நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்ம சாஸ்தா

தல விருட்சம்

இலுப்பை மரம்

தீர்த்தம்

சரப தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அங்கமங்கலம்

மாவட்டம்

தூத்துக்குடி

மாநிலம்

தமிழ்நாடு

மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி, தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார். அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார். நரசிம்மரின் தோற்றத்திற்குக் காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை. நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன. அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது இக்கோயிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, இலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார். இதனால் இவ்வூரில் உள்ள இலிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும், இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோயில் கோயில் என்றும் பெயர் பெற்றது.