Tag Archives: சக்கரப்பள்ளி

அரும்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி

அரும்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4374-311 018 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சக்கரவாகேஸ்வரர்
அம்மன் தேவநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரியாறு, காக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை
ஊர் சக்கரப்பள்ளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளிஎன்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.

இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர்என்றும், ஊர் சக்கரப்பள்ளிஎன்றும் பெயர்.

சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேசுவவரி, கௌமாரி, வைணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டைஎன்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.