Tag Archives: செண்பகபுரம்

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம்

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம். மோகனூர் போஸ்ட் கீவளூர் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்- 611 109.

+91- 4366 – 279 757, 94427 86870

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிகும்பேசுவரர்

தல விருட்சம்: – அரசு, வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – செண்பகபுரி

ஊர்: – செண்பகபுரம்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியைக் கொடுத்தார். அக்கனியை முருகனுக்குத் தருவதா? விநாயகருக்குத் தருவதா? என அன்னைக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே, உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியைத் தருவதாகக் கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தைச் சுற்றக் கிளம்பினார். விநாயகரோ, பெற்றோரைச் சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். எனவே, சினம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநிக்குச் சென்றார்.

அந்நிகழ்வை எண்ணிய விநாயகர் மனம் வருந்தினார். தனக்கு விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணிக் கலங்கினார். எனவே பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெறப் பெற்றோரிடம் அனுமதி வேண்டினார். அம்மை, அப்பன் இருவரும் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.