Tag Archives: பரவை

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை, மதுரை.
************************************************************************

+91 99949 12047 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துநாயகியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரவை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன், பரவை பகுதி முழுவதும் புஞ்சை நிலங்களாக இருந்தது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர். ஒரு சமயம் விவசாயிகள் உழுது கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் ஏர் ஆணி தட்டியது. தொடர்ந்து முயற்சிக்க ஏதோ ஒரு உலோகச் சத்தம் கேட்டது. விவசாயிகள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். பூமியில் பதிந்த ஏரை தூக்கினர்., பூமிக்குள் முத்துமுத்தாக சிகப்பு நிறத்தில் ஏதோ கொப்பளித்தது. இந்த அற்புதத்தை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியாகி, மற்ற விவசாயிகளை அழைத்தார்கள். அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அக்கட்சியைக் கண்டு வியந்தனர். அனைவரும் இந்த இடத்தில் அதிசய சக்தி இருப்பதாக கருதினர். மேலும், அவ்விடத்தில் தோண்டிப் பார்த்தபோது, உள்ளிருந்து ஒரு சிலை வெளிப் பட்டது. ஆதிபராசக்தியின் திருவுருவமான அழகான அம்மன் சிலையைக் கண்டு மக்கள் பக்தி பரவசம் கொண்டனர். பக்திப்பெருக்குடன் தீபாராதனை செய்து வழிபட்டனர். இவளுக்கு முத்து நாயகியம்மன் என்று பெயர் சூட்டப்பட்டது . அங்கு வசித்த பட்டையக்காரர் என்பவர் கனவில் அம்மன் தோன்றி,”நீங்கள் வசிக்க ஒரு குடில் இருப்பது போல், எனக்கும் ஒரு குடில் வேண்டாமா?” எனக் கேட்டாள். இந்த விசயத்தை கிராம கூட்டத்தில் அவர் கூற, பொதுமக்கள் கோயில் கட்டினர்.