Tag Archives: பேரையூர்

நாகநாதர் திருக்கோயில், பேரையூர்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்.

+91- 4322 – 221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர்
அம்மன் பிரகதாம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் செண்பகவனம், கிரிஷேத்திரம்
ஊர் பேரையூர்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதாயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோயில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி, பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.