Tag Archives: கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்மாவட்டம்.

+91- 4253 – 242 026 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேலாயுதர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கிணத்துக்கடவு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமேஎன்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் வேலாயுத சுவாமிஎன அழைக்கப்பட்டார்.

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்

+91 – 422 – 234 0462, + 91- 4253 292 860

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடைதிறந்திருக்கும்.

மூலவர்

முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காகக் கீழே இறங்கியவர், இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலைஎன்றாகி விட்டது. ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,”இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில்தான் நான் சிலை வடிவில் இருக்கிறேன்என்றார். இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும், அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.