Category Archives: குஜராத்

அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம்

அருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம், அகமதாபாத், குஜராத் மாநிலம்.

+91-79 – 23260001-2 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவாமி நாராயணர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அக்ஷர்தாம்
மாவட்டம் அகமதாபாத்
மாநிலம் குஜராத்

குஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார். பிஞ்சில் பழுத்த பழம் என்ற வாசகத்துக்கு இவரே சிறந்த உதாரணம். சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.

இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய சேத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார். முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய சேத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர். இராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், “இவரே இனி உங்கள் குருஎன அறிவித்தார். அவருக்கு சகஜானந்தாஎனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனைத் தங்கள் தெய்வமாகவே கருதினர்.

அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில், துவாரகை

அருள்மிகு துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்“) திருக்கோயில், துவாரகை, ஜாம்நகர் – 361 335 குஜராத் மாநிலம்.

+91-2892 – 234 080 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் துவராகாநாதர்(துவாரகீஷ்)
தாயார் பாமா, ருக்மணி, ராதா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுதாமபுரி
ஊர் துவாரகை
மாவட்டம் அகமதாபாத்
மாநிலம் குஜராத்

ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான். கண்ணன் கம்சனைக் கொன்றதால், தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்திருந்தான். தன்னால் யாதவ குலத்துக்குத் தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து, சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார். கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோசனை பரப்புள்ள இடம் தரப்பட்டது. துவாரகையைத் தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது தங்க நகரம்எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதுள்ள, புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.