Tag Archives: குடந்தைக் கீழ்க்கோட்டம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-243 0386 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகேஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மகாமகக்குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய சக்தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.


ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் சக்தியை தருவதாக உறுதியளித்தார். பிரளய காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம்என போற்றப்பட்டது. அதுவே கும்பகோணம்.” பரிபூரண சக்தி பெற்ற ஆதிசேஷன் கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு இலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.