Tag Archives: உறையூர்

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தான்தோன்றீஸ்வரர்

தாயார்

குங்குமவல்லி, காந்திமதி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

உறையூர்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.
நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.
இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, “தாயும் ஆனவன்எனப் பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார். ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார். “மகளே. காந்திமதி, கலங்காதே; இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் இலிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கித் திரும்பலாம்” என்றார்.
தானாக உன் முன் தோன்றிய எனக்கு தான் தோன்றீஸ்வரர்என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு குங்குமவல்லிஎன்ற திருநாமம் ஏற்படும்என்றார். காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். இங்குள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.

+91- 431-276 8546, 94439-19091, 97918 06457 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்
அம்மன் காந்திமதியம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் முக்கீச்சுரம்
ஊர் உறையூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

சோழஅரசர் ஒருவர் யானை மேல் உலா வந்தபோது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர்என்று பெயர் சூட்டினான்.

பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையைக் கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமூக்கீச்சுரம்என்று பெயர் ஏற்பட்டது.