Tag Archives: திருவேற்காடு

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2627 2430, 2627 2487 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர்
அம்மன் பாலாம்பிகை
தல விருட்சம் வெள்வேல மரம்
தீர்த்தம் வேத தீர்த்தம், பாலி நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேற்காடு
ஊர் திருவேற்காடு
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில், தேவர் முதலியோர் இமயமலையை அடைந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன்,”நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம்என அருள்புரிந்து அனுப்பி வைத்தார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள், ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் எனப் பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார். ரேணுகை, இங்கேயே தங்கிக் கோயில் கொண்டாள். அதுவே, புகழ்பெற்ற,”கருமாரியம்மன் கோயில்என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் திருவேற்காடுஎன அழைக்கப்படுகிறது.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077 (சென்னை), திருவள்ளூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91-44-2680 0430, 2680 0487, 2680 1686 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – கருவேல மரம்

தீர்த்தம்: – வேலாயுத தீர்த்தம்

ஆகமம் : – காமீகம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வேலங்காடு

ஊர்: – திருவேற்காடு

மாவட்டம்: – திருவள்ளூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் நாகப் புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாகப் பாவித்து வணங்கி வந்தனர்.

ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது.ம்பிகை தானாகத் தோன்றியதால் இவளுக்கு, “கருவில் இல்லாத கருமாரி“ என்ற பெயரும் உண்டு.

முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராசகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோடம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.