Tag Archives: ஆதி திருவரங்கம்

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்– 605 802 விழுப்புரம் மாவட்டம்.

+91- 4153- 293 677 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் ரங்கநாத பெருமாள்
தாயார் ரங்கநாயகி
தல விருட்சம் புன்னாக மரம்
தீர்த்தம் பெண்ணையாறு
ஆகமம்/பூசை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆதிதிருவரங்கம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

 

ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து, ஒளி மங்கிப் பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி, தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடித் தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து, தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை செய்யும்படி கூறினார். தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.