Tag Archives: சிக்கல்

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 245 452, 245 350 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)
அம்மன் சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
தல விருட்சம் மல்லிகை
தீர்த்தம் க்ஷீர புஷ்கரணி, பாற்குளம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மல்லிகாரண்யம், திருச்சிக்கல்
ஊர் சிக்கல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவைப் புலியாக மாறும்படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.

மனமிறங்கிய சிவன்,”பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் இந்த குளம் பாற்குளம்ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் வெண்ணெய் நாதர்ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் சிக்கல்என்றழைக்கப்பட்டது. ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் கோலவாமனப்பெருமாள்என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.