Tag Archives: திருத்துறைப்பூண்டி

அருள்மிகு அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

அருள்மிகு அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

+91 – 4369 – 224 099 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மூலவர்

அபிஷ்ட வரதராஜர்

உற்சவர்

சீனிவாசன், பத்மாவதி

தாயார்

பூதேவி, நீளாதேவி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருத்தருப்பூண்டி

ஊர்

திருத்துறைப்பூண்டி

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி என்ற தலம் ஒரு காலத்தில் திருத்தருப்பூண்டி என அழைக்கப்பட்டது. வில்வமரங்கள் சூழ்ந்த காடாக அமைந்தது இத்தலம். இங்கு, திருமால் குடி கொண்டுள்ளார். அவரது திருநாமம் அபிஷ்ட வரதராஜப் பெருமாள். வரதராஜப்பெருமாள் கோயில் என்பதை விட, அவரது தாசனாய் இங்கு கொலு வீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர்தான் பிரபலமாகி விட்டார். அனுமான் கோயில் என்றால் எல்லாருக்கும் பரிச்சயமாக உள்ளது. “அபிஷ்டம்என்ற சொல்லுக்கு கோரிக்கைஎன்று பொருள். இப்பெருமாளிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். இப்பகுதியை ஆண்ட வீரசோழன் என்ற மன்னன், எதிரிநாட்டினர் தந்த துன்பம் கருதி, அவர்களை போரிட்டு வெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தான். பெருமாளின் நல்லாசியால் வெற்றி பெற்றான். நியாயமான கோரிக்கை வைத்தால், இவர் நிறைவேற்றித் தருவது உறுதி என்ற கருத்தில் அபிஷ்ட வரதராஜப் பெருமாள்என்ற பெயர் ஏற்பட்டது. இவரது தொண்டராக விளங்கும் ஆஞ்சநேயரை வைராக்கிய ஆஞ்சநேயர்என்கின்றனர்.

ஆஞ்சநேயர் போன்ற தெய்வத்தை உலகத்தில் காண்பதரிது. “அஞ்சனை மைந்தா போற்றிஎனப் பாடினால் கூட முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ளும் அவர், “ஸ்ரீராம ஜெயம்என யாரோ ஒருவனைப் பற்றிச் சொன்னால் முகம் மலர்ந்து அங்கே வந்து உட்கார்ந்து விடுகிறார். இராமனை யாரென்று அவருக்கு தெரியவே தெரியாது. காட்டில் அவரைப் பார்க்கிறார். அவரது முகத்திலுள்ள கலவரத்தை உணர்ந்து கொள்கிறார். மனைவியை இழந்து தவிக்கும் அவரது கதையைக் கேட்கிறார். தன் எஜமானன் சுக்ரீவனிடம் போய் சொல்லி, அவரை அழைத்துச் செல்கிறார். இராமனே கதியென அவருக்காக வேலை செய்கிறார். அவருக்காக சண்டை போடுகிறார். இறுதியாக, அவருக்கு வைகுண்டபதவி தரப்படுவதை மறுக்கிறார். பூலோகத்தில் சிரஞ்சீவியாக இராமநாமம் கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவதாகச் சொல்லி, இன்றுவரை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஆஞ்சநேயருக்கு உலகில் பல இடங்களிலும் உயரமான சிலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில், அவர் விஸ்வ ரூபியாய், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

+91-4369-222 392, 94438 85316

மூலவர் பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன் பிரகன்நாயகி (பரியநாயகி)
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்துறைப்பூண்டி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

அரக்க குலத்தில், ஜல்லிகை என்ற பெண்மணியும் இப்பூமியில் பிறந்தாள். அரக்க குணங்களை விடுத்து, சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். கருணை உள்ளம் வாய்ந்த அப்பெண்ணுக்கு விருபாட்சன் என்ற இராட்சஷன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களையே உண்பவன். ஜல்லிகையோ, சாத்வீக உணவு உண்பவள். கணவனின் குணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் மறைந்த தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்த விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள்.