Tag Archives: திருமீயச்சூர்

அருள்மிகு சகலபுவனேஸ்வரர் உடனுறை மேகலாம்பிகை திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர்

அருள்மிகு சகலபுவனேஸ்வரர் உடனுறை மேகலாம்பிகை திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்.

+91-4366-239 170, 94448 36526 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சகலபுவனேஸ்வரர்
உற்சவர் பஞ்சமூர்த்தி
அம்மன் மேகலாம்பிகை, சவுந்தரநாயகி
தல விருட்சம் மந்தாரை, வில்வம்
தீர்த்தம் சூரியபுஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமீயச்சூர் இளங்கோயில்
ஊர் திருமீயச்சூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்விக் குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர இரதத்தில் இலலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி, அவள் கோபம் தணிய, “மனோன்மணிஎன்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக, பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார். அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே ஸ்ரீ மாத்ரேஎனத் துவங்கும் இலலிதா சகஸ்ரநாமம்ஆயிற்று.

இங்கு மூலவர் சகல புவனேஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, இலலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன் (சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர்

அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா திருக்கோயில், திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்.

+91-4366-239 170, 94448 36526 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மேகநாதசுவாமி (மிகரா அருணேஸ்வரர், முயற்சிநாதர்)
உற்சவர் பஞ்சமூர்த்தி
அம்மன் லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
தல விருட்சம் மந்தாரை, வில்வம்
தீர்த்தம் சூரியபுஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமீயச்சூர்
ஊர் திருமீயச்சூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி, அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர இரதத்தில் இலலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி, அவளைக் கோபம் தணியும்படியும், இதற்காக மனோன்மணிஎன்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார். அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்என்பவர்களை வரவழைத்து, தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே ஸ்ரீ மாத்ரேஎன துவங்கும் இலலிதா சகஸ்ரநாமம்ஆயிற்று.