Category Archives: கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் – ஆலயங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

முப்பந்தல் இசக்கியம்மன்

ஆரல்வாய்மொழி

பகவதி அம்மன் கன்னியாகுமரி

விநாயகர்

கேரளபுரம்

குமார சுவாமி

குமார கோயில்

அதிசய சாஸ்தா சுசீந்திரம்
தாணுமாலையர் சுசீந்திரம்
நந்தீஸ்வரர் திருநந்திக்கரை
திருவாழ்மார்பன் திருப்பதிசாரம்
ஆதிகேசவப் பெருமாள் திருவட்டாறு
நாகராஜா சுவாமி நாகர்கோவில்
யோகீஸ்வரர் புத்தேரி நாகர் கோயில்
பகவதி அம்மன் மண்டைக்காடு

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விநாயகர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கேரளபுரம்

மாவட்டம்

கன்னியாகுமரி

மாநிலம்

தமிழ்நாடு

வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். இராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.