Category Archives: திருச்சி

திருச்சி மாவட்டம் – ஆலயங்கள்

திருச்சி மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

ஆதிமாரியம்மன் S.கண்ணனூர்
சத்தியவாகீஸ்வரர் அன்பில்
சுந்தர்ராஜப் பெருமாள் அன்பில்
மருதாந்தநாதேஸ்வரர் ஆங்கரை, லால்குடி
மாங்கல்யேஸ்வரர் இடையாற்று மங்கலம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் இந்திரா நகர், திருச்சி
மரகதாசலேஸ்வரர் ஈங்கோய்மலை
உத்தமர் உத்தமர் கோவில்
உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான் மலை
அழகிய மணவாளர் உறையூர்

செல்லாண்டியம்மன்

உறையூர்

தான்தோன்றீஸ்வரர் உறையூர்
பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர்

வெக்காளி அம்மன்

உறையூர்

மாசி பெரியண்ணசுவாமி ஓமாந்தூர்
ஆஞ்சநேயர் கல்லுக்குழி
கைலாச நாதர் காருகுடி
காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) கீழசிந்தாமணி, திருச்சி
பிரசன்ன வெங்கடாஜலபதி குணசீலம்
சுப்பிரமணிய சுவாமி குமாரவயலூர்

மாரியம்மன்

சமயபுரம்

தாயுமானவர் திருச்சி
பூமிநாதர் திருச்சி
நந்தீஸ்வரர் திருச்சி
வேதநாராயணப் பெருமாள் திருநாராயணபுரம்
நெடுங்களநாதர் திருநெடுங்குளம்
பிரம்மபுரீஸ்வரர் திருப்பட்டூர்
பராய்த்துறைநாதர் திருப்பராய்த்துறை
ஆதிமூலேஸ்வரர் திருப்பாற்றுறை
ஞீலிவனேஸ்வரர் திருப்பைஞ்ஞீலி
மாற்றுரைவரதீஸ்வரர் திருவாசி
ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா(வல்)
வீரபத்திரர் திருவானைக்காவல்
எறும்பீஸ்வரர் திருவெறும்பூர்
புண்டரீகாட்சப் பெருமாள் திருவெள்ளறை
அங்காளபரமேஸ்வரி துறையூர்

பூங்காளியம்மன்

தென்னூர்

பஞ்சமுக விநாயகர் பிட்சாண்டார்கோயில்
கைலாசநாதர் மணக்கால்

சுப்ரமண்யசுவாமி

மணக்கால்

நல்லாண்டவர்

மணப்பாறை

மாரியம்மன்

மணப்பாறை

பூமிநாதர் மண்ணச்சநல்லூர்
உச்சிப்பிள்ளையார் மலைக்கோட்டை

உஜ்ஜைனி காளியம்மன்

மாகாளிக்குடி

ஆம்ரவனேஸ்வரர் மாந்துறை
சப்தரிஷிஸ்வரர் லால்குடி
திருக்காமேஸ்வரர் வெள்ளூர்
அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீரங்கம்
காட்டழகிய சிங்கர் ஸ்ரீரங்கம்
தசாவதாரக் கோயில் ஸ்ரீரங்கம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம், திருச்சி மாவட்டம்.

+91 4326 275 210, 275 310, 94863 04251

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மதியம் 12.30 மணி, மாலை 4 இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடாஜலபதி

உற்சவர்

ஸ்ரீனிவாசர்

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

காவிரி, பாபவிநாசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மசக்கரபட்டணம்

ஊர்

குணசீலம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆசிரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காகத் தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம்என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். “பிரசன்ன வெங்கடாஜலபதிஎனப் பெயர் சூட்டப்பட்டது.

கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது.