Tag Archives: திருமாணிக்குழி

வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்.

+91-4142-224 328 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
அம்மன் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சுவேத, கெடில நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாணிக்குழி
ஊர் திருமாணிக்குழி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக மகாவிஷ்ணு, வாமன அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,”இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள்என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும், அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்தப் பழியைப்போக்க திருமால், இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமாணிக்குழிஎன பெயர் ஏற்பட்டது.

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனிப் பள்ளியறையும் கிடையாது.