Tag Archives: திருவாவடுதுறை

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) திருக்கோயில், திருவாவடுதுறை

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) திருக்கோயில், திருவாவடுதுறை, திருவாவடுதுறை ஆதீனம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 232 055 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோமுக்தீஸ்வரர்
அம்மன் ஒப்பிலாமுலைநாயகி
தல விருட்சம் படர்அரசு
தீர்த்தம் கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நந்திநகர், நவகோடிசித்தர்புரம்
ஊர் திருவாவடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோவாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.