Tag Archives: ஈச்சனாரி

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி– 641021. கோயம்புத்தூர்

+ 91 – 422 – 267 2000, 267 7700 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – விநாயகர் (விக்னேஸ்வர்)

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஈச்சனாரி

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் சிலையை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டது. பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு நிறுவப்பட்டது.” – இது தலவரலாறு.

இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.