Tag Archives: திருமயம்

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.

+91-4322-221084, 99407 66340

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியகிரீஸ்வரர்
அம்மன் வேணுவனேஸ்வரி
தல விருட்சம் மூங்கில்மரம்
தீர்த்தம் சந்திரபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமய்யம்
ஊர் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில், சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம்

+91-4322 -221084, 99407 66340 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியமூர்த்தி
உற்சவர் அழகியமெய்யர்
தாயார் உஜ்ஜீவனதாயார்
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் சத்ய புஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமய்யம்
ஊர் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

தல வரலாற்றினையே கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கும் கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில். ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி, பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.