Category Archives: வேலூர்

வேலூர் மாவட்டம் – ஆலயங்கள்

வேலூர் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

வேணுகோபாலஸ்வாமி இசையனூர்
பாலமுருகன் இரத்தினகிரி
சுப்பிரமணியர், காங்கேயன் காங்கேயநல்லூர்
கவுதமேஸ்வர் காரை வேலூர்
சிங்கிரி காவலூர்
ஜலகண்டேஸ்வரர் கோட்டை, வேலூர்
செல்வ விநாயகர் சேண்பாக்கம்
யோக நரசிம்மசுவாமி சோளிங்கர்
சலநாதீஸ்வரர் தக்கோலம்
நரசிம்மேஸ்வரர் (மரகதவல்லி) தியாமுகச்சேரி ஐயம்பேட்டை சேரி
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருப்பாற்கடல்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

மணிகண்டீஸ்வரர் திருமால்பூர்
வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
பள்ளிகொண்ட பெருமாள் பள்ளிகொண்டான்
வளவநாதீஸ்வரர் வளையாத்தூர்

சுப்ரமணியர்

வள்ளிமலை

அதிதீஸ்வரர் வாணியம்பாடி
தன்வந்திரி வாலாஜாபேட்டை
மார்க்கபந்தீசுவரர் விரிஞ்சிபுரம்

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம்.

+91 4174 226 652,99941 07395, 93600 55022

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அதிதீஸ்வரர்

அம்மன்

பெரியநாயகி, பிரகன் நாயகி

தல விருட்சம்

அகண்ட வில்வமரம்

தீர்த்தம்

சிவதீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வாணியம்மைபாடி

ஊர்

வாணியம்பாடி

மாவட்டம்

வேலூர்

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள்எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள்.

(கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடிஆனது.