Tag Archives: சிங்கம்புணரி

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்.

+91- 98650 62422 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சேவுகப் பெருமாள்

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கம்புணரி

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், “சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்என்றதுடன், “பெருமாளேஎன்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,”சேவுகப்பெருமாள் அய்யனார்என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.