Category Archives: விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் – ஆலயங்கள்

விழுப்புரம் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

நரசிம்மர் அந்திலி
நிதீஸ்வரர் அன்னம்புத்தூர்
அதுல்யநாதேஸ்வரர் அறகண்டநல்லூர்
ஆதி திருவரங்கம் பெருமாள் ஆதி திருவரங்கம்
அர்த்தநாரீஸ்வரர் இரிஷிவந்தியம்
மகாகாளேஸ்வரர் இரும்பை
அரசலீஸ்வரர் ஒழிந்தியாம்பட்டு
வரதராஜப்பெருமாள் கச்சிராயப்பாளையம்

சனீஸ்வரர்

கல்பட்டு

சிவலோகநாதர் கிராமம்
அகஸ்தீஸ்வரர் கிளியனூர்

பச்சை அம்மன் (சப்தகன்னி)

குமாரை

பொன்னியம்மன்

கொங்கரப்பட்டு

வாலீஸ்வரர் கோலியனூர்
சிங்கவரம் பெருமாள் சிங்கவரம்

செல்வலலிதாம்பிகை

செல்லப்பிராட்டி, செஞ்சி

மருந்தீசர் டி. இடையாறு
லட்சுமி நரசிங்க பெருமாள் திண்டிவனம்
திருவிக்கிரமசுவாமி திருக்கோவிலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர்
பக்தஜனேஸ்வரர் திருநாவலூர்
சந்திரமவுலீஸ்வரர் திருவக்கரை
அபிராமேஸ்வரர் திருவாமத்தூர்
நெற்குத்தி விநாயகர் தீவனூர்

நாககன்னியம்மன்

தும்பூர்

சடையப்பர்

தென்செட்டி ஏந்தல்

சொர்ணபுரீஸ்வரர் தென்பொன்பரப்பி
சொர்ணகடேஸ்வரர் நெய்வணை
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் பஞ்சவடீ
பனங்காட்டீஸ்வரர் பனையபுரம்
இலட்சுமி நரசிம்ம சுவாமி பரிக்கல்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பாதூர்
நாகேஸ்வர சுவாமி பூவரசன் குப்பம்
இலட்சுமி நரசிம்மர் பூவரசன்குப்பம்
ரிஷபபுரீஸ்வரர் மேல் சேவூர்
அங்காளபரமேசுவரி மேல்மலையனூர்
சனீஸ்வரன் மொரட்டாண்டி
கிருபாபுரீஸ்வரர் வெண்ணெய்நல்லூர்

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், பூவரசன்குப்பம்

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், பூவரசன்குப்பம், மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம்.

+91-413 269 8191, 94439 59995

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இலட்சுமி நரசிம்மர்

உற்சவர்

பிரகலாத வரதன்

தாயார்

அமிர்தவல்லி

தல விருட்சம்

நெல்லி

தீர்த்தம்

சக்கர தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்திரம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தெட்சிண அகோபிலம்

ஊர்

பூவரசன்குப்பம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளது. இத்தலத்தின் கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்கப் பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் இலட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக் கிறார் நரசிம்மர்.

நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் அகோபிலம்என்றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் தென் அகோபிலம்எனவும் அழைக்கப்படுகிறது.