Tag Archives: வியாசர்பாடி

இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி

அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை.

+91-44 2551 8049, 99418 60986

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரவீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மரகதாம்பாள்
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பானுமாபுரி
ஊர் வியாசர்பாடி
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சூரியபகவானின் மனைவியான சமுக்ஞா தேவி, அவரது வெப்பம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி, சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற வேளையில், சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் இலிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே ரவீஸ்வரர்என்றும் பெயர் பெற்றார்.