Tag Archives: விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில், விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில், விளாச்சேரி, மதுரை மாவட்டம்.

+91- 97888 54854 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பட்டாபிராமர்

தாயார்

சீதை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

விளாச்சேரி

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

சீதையை மீட்க வாரைப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காண வேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக இராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் இலட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் இராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் இராமரின் பட்டபிஷேக காலத்தில், இராமருக்கு வலப்பகம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர். இராமரின் ஜாதகம் அமைவது போல் ஒருவருக்கு அமைவது மிகவும் அரிது. இவரது படத்தை வீட்டில் வைத்து வழிபட்டாலே போதும்.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி, மதுரை மாவட்டம்.

+91- 452 237 1870 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் விளாச்சேரி
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி உத்திர நட்சத்திரம் சனிக்கிழமையில்தான் நிகழ்ந்தது.

தேவலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட குழந்தை ஒரு காட்டில் கிடந்தது. குழந்தையின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. பந்தளமன்னர் ராஜசேகரன் அக்குழந்தையை எடுத்து, “மணிகண்டன்எனப் பெயரிட்டு சொந்த மகனைப்போல் வளர்த்து வந்தார். இதன் பிறகு ராஜசேகர மன்னரின் பட்டத்தரசி ராஜராஜன்என்ற மகனைப் பெற்றாள். தனக்கென மகன் இருந்தாலும் முதல் மகனான மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட மன்னர் நினைத்தார். இதை வஞ்சகம் நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி ராஜராஜனுக்கு முடி சூட்டும்படி கூறினார். மருத்துவர் மூலம் புலிப்பாலால்தான் தன் தலைவலி போகும் என கூறச் செய்தாள். காட்டிற்குச் சென்ற அவர் தர்ம சாஸ்தா என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள், பொன்னம்பலத்திற்கு அழைத்து சென்று, இரத்தின சிம்மாசனம் அமைத்து பூஜித்தனர். இந்த இடம் தான் தற்போது ஐயப்பன் ஜோதியாகக் காட்சி தரும் பொன்னம்பல மேடாக விளங்குகிறது. பின்பு புலிகளுடன் நாடு திரும்பிய ஐயப்பனிடம், எதிரிகள் மன்னிப்பு கேட்டனர்.