Tag Archives: சாயாவனம்

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 260 151 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாயாவனேஸ்வரர்
அம்மன் குயிலினும் இனி மொழியம்மை (கோஷாம்பாள்)
தல விருட்சம் கோரை
தீர்த்தம் ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சாய்க்காடு, மேலையூர்
ஊர் சாயாவனம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் அப்பர், ஞானசம்பந்தர்

மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.

தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். “சாய்என்றால் கோரை என்று பொருள் . பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் சாய்க்காடுஎனப்பட்டது .

இந்திரன் தாயார் தினமும் இந்திர லோகத்திலிருந்து இங்கு வந்து ஈசனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . பூஜை வேளையில் தாயைக்காணாது இந்திரன் ஒருநாள் தொடர்ந்து வந்து பார்க்கையில், அவர் இத்தலத்திற்கு வருவது கண்டான் . தாய்க்காக இத்தலத்தையே அவன் பெயர்த்தெடுக்க முயன்று தனது தேரில் பூட்டியபோது, ஈஸன் தன் கால்விரலால் சற்றே பூமியில் அழுத்த இந்திரன் தேர் எழும்பாதது கண்டான். தன் தவறை உணர்ந்து இத்தலத்து ஈசனிடம் பிழை பொறுத்தறுளுமாரு வேண்டினான் . ஈசனும் அவனை பொறுத்து அருள் வழங்கினார் என்பது தல வரலாறு.

இயற்பகை நாயனார் பிறந்தது இத்தலத்தில்தான்.