Tag Archives: தலைச்சங்காடு

அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு

அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு, ஆக்கூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 280 757 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்காரண்யேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தர நாயகி
தல விருட்சம் புரசு
தீர்த்தம் சங்கு தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தலைச்சங்காடு
ஊர் தலைச்சங்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக, சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது. ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள்.

கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதி. நடுவில் முருகன் சன்னதி. வலது பக்கம் அம்மன் சன்னதி என அமைக்கப்பட்டிருக்கும்.

திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது.