Tag Archives: மஞ்சூர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி மாவட்டம்.

+91- 423- 250 9353 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

தலவிருட்சம்

அரசமரம்

பழமை 30 வருடங்களுக்கு முன்
ஊர்

மஞ்சூர்

மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

30 வருடங்களுக்கு முன்பு குரு கிருஷ்ண நந்தாஜி என்பவர் இங்குள்ள காடுகளில் சுற்றித்திரிந்துவிட்டு இப்போதுள்ள மலைக்கு அருகில் உள்ள சிவன் குகைக்குள் சிலகாலம் கடும் தவம் மேற்கொண்டார். பின்பு அழகிய எழில் சூழ்ந்த அன்னமலைக் குன்றில், தண்டாயுதபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். நாளடைவில் முருகப்பெருமானின் அருள் பரவ, இக்கோயில் பிரபலமடையத் தொடங்கியது. அமைதியும் எழில் சூழ்ந்த மலைக்குன்றுகளும் அமைந்து காண்பவர் கண்களையும் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும்மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது. படுகர் இன மக்கள் இங்கு பஜனை நடத்துகின்றனர். இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் (ஆண்டி அலங்காரம், சர்வ அலங்காரம், ராஜ அலங்காரம்இன்னும் பிற) முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.