Tag Archives: பில்லூர்

அருள்மிகு கோவனூர் முருகன் கோயில், பில்லூர் கிராமம், கோவனூர்

அருள்மிகு கோவனூர் முருகன் கோயில், பில்லூர் கிராமம், கோவனூர், சிவகங்கை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணியர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோவனூர்

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

அகத்தியர் ஒரு முறை திருப்புவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தபின், கானப்பேர் காளீசரைத் தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது மாலைநேரமாகி விட்டது. எனவே பூஜை செய்வதற்காக, ஒரு ஊற்றைத் தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராகப் பெருகியது. இது தான் சித்த வைத்தியத்தில் சிறப்பாக பயன்படுத்தப்படும் பூநீர்ஆகும். இதனை சேகரிப்பதற்காகத்தான் சித்தர்களும், சித்த வைத்தியர்களும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் அதிகாலை 6 மணிக்குள் இங்கு வந்து முருகனை தரிசித்து விட்டு பூநீர் சேகரித்து செல்கின்றனர்.