Tag Archives: சித்துக்காடு

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு, தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை மாவட்டம்.

+91 93643 48700, 93826 84485 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாத்திரீஸ்வரர்
தாயார் பூங்குழலி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சித்துக்காடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.

மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றான். பூங்குழலி எனப் பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.