Tag Archives: திருக்கூடலூர்

அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்

அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் – 614 202, தஞ்சாவூர் மாவட்டம்.+91- 93443 – 03803, 93452 – 67501 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வையம்காத்த பெருமாள்
உற்சவர் ஜெகத்ரட்சகன்
தாயார் பத்மாசனவல்லி
தல விருட்சம் பலா
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சங்கமாபுரி, தர்ப்பாரண்யம்
ஊர் திருக்கூடலூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமியைப் பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை புகுந்தானூர்என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் வையங்காத்த பெருமாள்எனப்படுகிறார்.