Tag Archives: புத்தேரி

யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி – நாகர்கோயில்

அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4652- 275 230 , 94871 01770

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.

மூலவர் யோகீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புத்தேரி, நாகர்கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு பூலா உடைய கண்டன் சாஸ்தாஎன்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்என்றும் பெயர் சூட்டினர். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.