Category Archives: நவ திருப்பதி

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 முதல் 12 வரையிலும், மாலை 5.00 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்
உற்சவர் பொலிந்து நின்ற பிரான்
தாயார் ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆழ்வார் திருநகரி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததைப் பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரைக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் மதுரகவிஆழ்வார் என புகழப்பட்டார். அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்தார் மதுரகவியாழ்வார். அந்த ஒளி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது. அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார்.
ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார். “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார்.

திருமால் ஆலயங்கள் – 108 திவ்விய தேசங்கள்

திருமால் ஆலயங்கள் – 108 திவ்விய தேசங்கள்

அருள்மிகு ஊர் மாவட்டம்
இமையவரப்பன் திருச்சிற்றாறு ஆழப்புழா
மாயப்பிரான் திருப்புலியூர் ஆழப்புழா
பாம்பணையப்பன் திருவண்வண்டூர் ஆழப்புழா
ஆதிஜெகநாதப் பெருமாள் திருப்புல்லாணி இராமநாதபுரம்
நைமிசாரண்யம் பெருமாள் நைமிசாரண்யம் உத்தர பிரதேசம்
பத்ரிநாத் கோவில் பத்ரிநாத் உத்தராகண்ட்
ரகுநாத் மந்திர் திருக்கண்டங்கடிநகர் உத்ராஞ்சல்
பரமபுருஷன் திருப்ரிதி உத்ராஞ்சல்
காட்கரையப்பன் திருக்காக்கரை எர்ணாகுளம்
லெட்சுமணப்பெருமாள் திருமூழிக்களம் எர்ணாகுளம்
கோவிந்தராஜப்பெருமாள் சிதம்பரம் கடலூர்
தேவநாத பெருமாள் திருவகிந்திபுரம் கடலூர்
திருவாழ்மார்பன் திருப்பதிசாரம் கன்னியாகுமரி
ஆதிகேசவப் பெருமாள் திருவட்டாறு கன்னியாகுமரி
பிரகலாத வரதன் (அஹோபிலம்) அஹோபிலம் கர்நூல்
அஷ்டபுஜப்பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
வரதராஜப் பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
உலகளந்த பெருமாள் திருஊரகம் காஞ்சிபுரம்
கள்வப்பெருமாள் திருக்கள்வனூர் காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) திருக்காரகம் காஞ்சிபுரம்
கார்வானப்பெருமாள் திருக்கார்வானம், காஞ்சி காஞ்சிபுரம்
உலகளந்த பெருமாள் திருநீரகம் காஞ்சிபுரம்
நீர்வண்ணப்பெருமாள் திருநீர்மலை காஞ்சிபுரம்
பவளவண்ணபெருமாள் திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
பாண்டவதூதப் பெருமாள் திருப்பாடகம் காஞ்சிபுரம்
விஜயராகவப் பெருமாள் திருப்புட்குழி காஞ்சிபுரம்
நித்ய கல்யாணபெருமாள் திருவிடந்தை காஞ்சிபுரம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவெக்கா காஞ்சிபுரம்
அழகிய சிங்க பெருமாள் திருவேளுக்கை, காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
விளக்கொளி பெருமாள் தூப்புல் காஞ்சிபுரம்
நிலாத்துண்டப்பெருமாள் நிலாதிங்கள் காஞ்சிபுரம்
பரமபதநாதர் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்‘”) துவாரகை குஜராத்
அற்புத நாராயணன் திருக்கடித்தானம் கோட்டயம்
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
சவுமியநாராயணபெருமாள் திருகோஷ்டியூர் சிவகங்கை
பார்த்தசாரதி திருவல்லிக்கேணி சென்னை
ஆண்டளக்கும் ஐயன் ஆதனூர் தஞ்சாவூர்
ஹரசாப விமோசன பெருமாள் கண்டியூர் தஞ்சாவூர்
கஜேந்திர வரதன் கபிஸ்தலம் தஞ்சாவூர்
சாரங்கபாணி கும்பகோணம் தஞ்சாவூர்
அப்பக்குடத்தான் கோவிலடி தஞ்சாவூர்
நீலமேகப்பெருமாள்(மாமணி) தஞ்சாவூர் தஞ்சாவூர்
வையம்காத்த பெருமாள் திருக்கூடலூர் தஞ்சாவூர்
சாரநாதப்பெருமாள் திருச்சேறை தஞ்சாவூர்
ஒப்பிலியப்பன் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
வல்வில்ராமன் திருப்புள்ளம் பூதங்குடி தஞ்சாவூர்
கோலவில்லி ராமர் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர்
திருநறையூர் நம்பி நாச்சியார்கோயில் தஞ்சாவூர்
ஜெகநாதன் நாதன்கோயில் தஞ்சாவூர்
சுந்தர்ராஜப் பெருமாள் அன்பில் திருச்சி
உத்தமர் உத்தமர் கோவில் திருச்சி
அழகிய மணவாளர் உறையூர் திருச்சி
புண்டரீகாட்சப் பெருமாள் திருவெள்ளறை திருச்சி
அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீரங்கம் திருச்சி
அழகிய நம்பிராயர் திருக்குறுங்குடி திருநெல்வேலி
தோத்தாத்ரிநாதன் நாங்குனேரி திருநெல்வேலி
அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
பக்தவத்சலப்பெருமாள் திருநின்றவூர் திருவள்ளூர்
வீரராகவர் திருவள்ளூர் திருவள்ளூர்
ஸ்தலசயனப் பெருமாள் மகாபலிபுரம் திருவள்ளூர்
பக்தவத்சல பெருமாள் திருக்கண்ண மங்கை திருவாரூர்
கிருபாசமுத்திரப்பெருமாள் திருச்சிறுபுலியூர் திருவாரூர்
மோகன கிருஷ்ணன் திருவாய்ப்பாடி, கோகுலம் தில்லி
கோவர்த்தனகிரிதாரி வடமதுரை தில்லி
வைத்தமாநிதி பெருமாள் திருக்கோளூர் தூத்துக்குடி
அரவிந்தலோசனர் திருதொலைவில்லி மங்கலம் தூத்துக்குடி
ஸ்ரீ நிவாசன் திருத்தொலைவில்லி மங்கலம் தூத்துக்குடி
பூமிபாலகர் திருப்புளியங்குடி தூத்துக்குடி
மகரநெடுங் குழைக்காதர் தென்திருப்பேரை தூத்துக்குடி
விஜயாஸனர் நத்தம், வரகுணமங்கை தூத்துக்குடி
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை தூத்துக்குடி
வைகுண்டநாதர்(கள்ளபிரான்) ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
ஆதிநாதன் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
திரிவிக்கிரமன் சீர்காழி நாகப்பட்டினம்
பேரருளாளன் செம்பொன்செய் கோயில் நாகப்பட்டினம்
நாண்மதியப்பெருமாள் தலச்சங்காடு நாகப்பட்டினம்
பரிமள ரங்கநாதர் திரு இந்தளூர் நாகப்பட்டினம்
சவுரிராஜப்பெருமாள் திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம்
கோபாலகிருஷ்ணன் திருக்காவளம்பாடி நாகப்பட்டினம்
செங்கண்மால் திருத்தெற்றியம்பலம் நாகப்பட்டினம்
தெய்வநாயகர் திருத்தேவனார் தொகை நாகப்பட்டினம்
வேதராஜன் திருநகரி நாகப்பட்டினம்
குடமாடு கூத்தன் திருநாங்கூர் (அரிமேய விண்ணகரம்) நாகப்பட்டினம்
வரதராஜப்பெருமாள் திருமணிக்கூடம் நாகப்பட்டினம்
புருஷோத்தமர் திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம்
அழகியசிங்கர் திருவாலி நாகப்பட்டினம்
அண்ணன் பெருமாள் திருவெள்ளக்குளம் நாகப்பட்டினம்
தேவாதிராஜன் தேரழுந்தூர் நாகப்பட்டினம்
சவுந்தரராஜப்பெருமாள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம்
வைகுண்டநாதர் வைகுண்ட விண்ணகரம் நாகப்பட்டினம்
லோகநாதப்பெருமாள் திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம்
பத்ரிநாராயணர் திருமணிமாடக் கோயில் நாகப்பட்டினம்
பரமபத நாதன் பரமபதம் நாதன் திருவடி
ஸ்ரீமூர்த்தி திரு சாளக்கிராமம் நேப்பாளம்
திருவாழ்மார்பன் திருவல்லவாழ் பந்தனம் திட்டா
திருக்குறளப்பன் திருவாறன் விளை பந்தனம் திட்டா
உய்யவந்தபெருமாள் திருவித்துவக்கோடு பாலக்காடு
சத்திய மூர்த்தி பெருமாள் திருமயம் புதுக்கோட்டை
க்ஷீராப்திநாதன்

திருப்பாற்கடல்

புவியில் இல்லை

ரகுநாயகன் (ராமர்) சரயு, அயோத்தி பைசாபாத்
கள்ளழகர் அழகர்கோவில் மதுரை
காளமேகப்பெருமாள் திருமோகூர் மதுரை
கூடலழகர் மதுரை மதுரை
நாவாய் முகுந்தன் திருநாவாய் மலப்புரம்
நின்ற நாராயணப் பெருமாள் திருத்தங்கல் விருதுநகர்
வடபத்ரசாயி(ஆண்டாள்) ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர்
திருவிக்கிரமசுவாமி திருக்கோவிலூர் விழுப்புரம்
யோக நரசிம்மசுவாமி சோளிங்கர் வேலூர்

நவ திருப்பதிகள்

வைகுண்டநாதர்(கள்ளபிரான்) ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
விஜயாஸனர் நத்தம், வரகுணமங்கை தூத்துக்குடி
வைத்தமாநிதி பெருமாள் திருக்கோளூர் தூத்துக்குடி
பூமிபாலகர் திருப்புளியங்குடி தூத்துக்குடி
ஆதிநாதன் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
மகரநெடுங் குழைக்காதர் தென்திருப்பேரை தூத்துக்குடி
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை தூத்துக்குடி
ஸ்ரீ நிவாசன் திருத்தொலைவில்லிமங்கலம் தூத்துக்குடி
அரவிந்தலோசனர் திருத்தொலைவில்லிமங்கலம் தூத்துக்குடி