நாகநாதசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாகநாதர் சன்னதி, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 241 091, 94429 29270

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர், ராமநாதர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் நாகதீர்த்தம்
ஆகமம் காமியம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு நியமமாகக் கொண்டார். பின் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர். அப்போது அசரீரி தோன்றி, “இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்என்று கூறியது. அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாககன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்க வழியாகப் பாதாளம் சென்றாள். பின் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான். இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாகன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார். ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, “வேண்டும் வரம் கேள்எனக் கூறினார்.

நாகநாதர் திருக்கோயில், பேரையூர்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்.

+91- 4322 – 221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர்
அம்மன் பிரகதாம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் செண்பகவனம், கிரிஷேத்திரம்
ஊர் பேரையூர்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதாயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோயில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி, பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.