நாக தோஷம் நீங்க

நாக தோஷம் நீங்க

சோதிடம் சொல்வது:

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து,
2,4,5,7,8,12
வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
1.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
2.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
3.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
4.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு,
மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,
5.
லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால்,
விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
6.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
7.
அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
8.
அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது
தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாம்புப் புற்றை இடித்தால், பாம்பினை அடித்து கொன்றால் நாகதோஷம் ஏற்பட்டு விந்து சக்தி நீர்த்துப்போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறதாம். ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவதொன்றில் நாகப்பிரதிட்டை செய்தால் தோஷம் நீங்குமென சோதிடர்கள் சொல்கின்றனர்.

ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் நல்லதுதானே!

இராமநாதர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்

முத்தால பரமேஸ்வரியம்மன்

பரமக்குடி

இராமநாதபுரம்

மகுடேஸ்வரர் கொடுமுடி ஈரோடு
அனந்தீஸ்வரர் சிதம்பரம் கடலூர்

முத்துக்குமரர்

பரங்கிப்பேட்டை

கடலூர்
நாகராஜா சுவாமி நாகர்கோவில் கன்னியாகுமரி

குமரக்கோட்ட முருகன்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பச்சைவண்ணப்

பெருமாள்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அமிர்தபுரி காஞ்சிபுரம்
ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம்
நஞ்சுண்டேஸ்வரர் காரமடை கோயம்புத்தூர்
வரசித்தி விநாயகர் காணிப்பாக்கம் சித்தூர்

சுப்பிரமணியர்

பில்லூர், கோவனூர்

சிவகங்கை
திருவேட்டீஸ்வரர் திருவல்லிக்கேணி சென்னை
தேனுபுரீஸ்வரர் மாடம்பாக்கம் சென்னை
இரவீஸ்வரர் வியாசர்பாடி சென்னை
அருணஜடேசுவரர் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
சுப்பிரமணிய சுவாமி குமாரவயலூர் திருச்சி
நாகராஜர் மாளா, பாம்பு மேக்காடு மனை

திருச்சூர்

தொண்டர்கள் நயினார் சுவாமி திருநெல்வேலி திருநெல்வேலி
பக்தவத்சலப்பெருமாள் திருநின்றவூர் திருவள்ளூர்

சாமாண்டியம்மன்

சாமாண்டிபுரம், கம்பம்

தேனி

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

தீர்த்த தொட்டி

தேனி

சிவலோகநாதர் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
நாகநாதசுவாமி நாகநாதர் சன்னதி நாகப்பட்டினம்
அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு நாமக்கல்
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) திருவரங்குளம் புதுக்கோட்டை
கல்யாணராமர் மீமிசல் புதுக்கோட்டை
பிரளயகால வீரபத்திர சுவாமி கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு
காசி விஸ்வநாதர் இரும்பாடி சோழவந்தான் மதுரை

நாகம்மாள்

கெங்கமுத்தூர், பாலமேடு

மதுரை

அய்யனார் சுவாமி

கோச்சடை

மதுரை

செல்லத்தம்மன், கண்ணகி

சிம்மக்கல், மதுரை

மதுரை

அங்காள ஈசுவரி மாந்தோப்பு விருதுநகர்
நாகேஸ்வர சுவாமி பூவரசன் குப்பம் விழுப்புரம்

சங்கமமும், Hotlinks

சங்கமமும்,  Hotlinksம் வேலை செய்யவில்லையே!