மன அமைதி கிடைக்க

மன அமைதி கிடைக்க

இப்பொழுதெல்லாம் பாமரர் முதல் படித்தவன் வரை சொல்லும் வார்த்தைகள் ஸ்டிரெஸ், டென்ஷன். அகராதியின்படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அழுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

காரணங்கள்:

இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என்பது இன்றய சமூகக் கொள்கை. ஓடும் உலகத்துடன் ஓட முடியாதவர்கள் மன அழுத்தம் அடைந்து, மனதளவில் ஊனமடைகின்றனர். மன பாதிப்புகள் உடலையும் கட்டாயம் பாதிக்கும்.

மன அழுத்தம் மறைய 10 எளிய வழிகள்:

டென்ஷன் என்பது மன அழுத்தத்தை மட்டுமே குறிக்கும். ஆனால் கோபம் என்பது பிறர் உள்ளத்தையும் புண்படுத்தக் கூடியது. கோபம், கோபமடைபவர்களின் உள்ளத்தையும் உடலையும் பாதிக்கக் கூடியது. தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுப்பது தான் கோபம். நிகழ்காலத்தில் துயரத்தை ஏற்படுத்தி, பிற்காலத்தில் பகையை உண்டாக்குவது கோபம்.

டென்ஷனால் நம் மனது மட்டும் அழுத்தமும் இறுக்கமும் அடைகின்றது. ஆனால் அந்த டென்ஷனோ கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.

எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

மன அழுத்தம் உடையவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கிட இதோ சில எளிய யோசனைகள்:-

டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஒரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள் இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும். தியானம் செய்யத் தெரியாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம். அல்லது முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம். மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம் நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும். தொலைக்காட்சி பார்ப்பதை அறவே தவிற்கவும். இல்லையெனில் கார்டூன் பார்க்கவும். எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும். டென்ஷன் ஏற்படாது.

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.

ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். டென்ஷனாக இருக்கும்பொழுது அருகில் (அட்டவணையில்)உள்ள (இல்லையெனில் ஏதாவதொரு) ஆலயத்தில் அமர்ந்து இறைவழிபாடு செய்யுங்கள். மன அமைதி கிட்டும்.

அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) இராமேஸ்வரம் இராமநாதபுரம்

சுக்ரீவர்

இராமேஸ்வரம்

இராமநாதபுரம்

ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்
சங்கரனார் பார்த்திபனூர் இராமநாதபுரம்
கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஈரோடு ஈரோடு

சாரதா மாரியம்மன்

கோபிசெட்டிப்பாளையம்

ஈரோடு

ஐயப்பன் கோபி ஈரோடு
வீரபத்திரசுவாமி ராயசோட்டி கடப்பா
பதஞ்சலீஸ்வரர் கானாட்டம்புலியூர் கடலூர்
பாடலீஸ்வரர் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
நடராஜர் கோயில் நெய்வேலி கடலூர்
ஆதிமூலேஸ்வரர் பரங்கிப்பேட்டை கடலூர்
திருவரசமூர்த்தி மெய்யாத்தூர் கடலூர்
நந்தீஸ்வரர் திருநந்திக்கரை கன்னியாகுமரி
இரத்தினகிரீஸ்வரர் அய்யர் மலை கரூர்
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
வீரட்டேஸ்வரர் கீழ்படப்பை காஞ்சிபுரம்

திரிசக்தி அம்மன்

தாழம்பூர்

காஞ்சிபுரம்

முன்குடுமீஸ்வரர் பி.வி.களத்தூர் காஞ்சிபுரம்
சந்திரசூடேசுவரர் ஓசூர் கிருஷ்ணகிரி
ஆஞ்சநேயர் ஆலத்தியூர், மலப்புறம் கேரளா
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்

தத்தாத்ரேய சுவாமி

கொழுமம், குமாரலிங்கம்

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
சங்கமேஸ்வரர் கோட்டைமேடு கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

தேசிகநாதசுவாமி நகர சூரக்குடி சிவகங்கை
ஆதிபுரீஸ்வரர் திருவொற்றியூர் சென்னை
கபாலீஸ்வரர் மயிலாப்பூர் சென்னை

பாலசுப்பிரமணியர்

வடசென்னிமலை

சேலம்
ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
வில்வ வனேஸ்வரர் திருவைகாவூர் தஞ்சாவூர்
மல்லிகார்ஜூனேசுவரர் தகட்டூர் தர்மபுரி
தீர்த்தகிரீசுவரர் தீர்த்தமலை தர்மபுரி

திரவுபதி அம்மன்

ஐவர் மலை, பழநி

திண்டுக்கல்

நல்லாண்டவர்

மணப்பாறை

திருச்சி

கொடுங்கலூர் பகவதி கொடுங்கலூர் திருச்சூர்
சுயம்புலிங்க சுவாமி உவரி திருநெல்வேலி
லட்சுமிநாராயணப்

பெருமாள்

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
வேதபுரீஸ்வரர் செய்யாறு திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை திருவண்ணாமலை
இராமச்சந்திரப் பெருமாள் நெடுங்குன்றம் திருவண்ணாமலை

ராம்சுரத்குமார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

கனககிரீசுவரர் தேவிகாபுரம் திருவண்ணாமலை
உத்தமராயப்பெருமாள் பெரிய அய்யம்பாளையம் திருவண்ணாமலை
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆற்றுக்கால் திருவனந்தபுரம்
பரசுராமர் திருவல்லம் திருவனந்தபுரம்
சுப்பிரமணியசுவாமி திருத்தணி திருவள்ளூர்
ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை திருவள்ளூர்
கல்யாணசுந்தர வீரபத்திரர் மாநெல்லூர் திருவள்ளூர்
வாசுதேவ பெருமாள் கடகம்பாடி திருவாரூர்
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருச்சென்னம்பூண்டி திருவாரூர்
ஏகாம்பரேஸ்வரர் மானந்தகுடி திருவாரூர்
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் பாடகச்சேரி திருவாரூர்
கோதண்டராமர் வடுவூர் திருவாரூர்

மூங்கிலணைக் காமாட்சி

தேவதானப்பட்டி

தேனி

வீரட்டேஸ்வரர் கொருக்கை நாகப்பட்டினம்
ஆதிகும்பேஸ்வரர் செண்பகபுரம் நாகப்பட்டினம்
அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூர் நாகப்பட்டினம்
மாயூரநாதர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்
வைத்தியநாதர் வைத்தீசுவரன்கோயில் நாகப்பட்டினம்
காசி விஸ்வநாதர் ஊட்டி நீலகிரி

ஹெத்தையம்மன் நாகராஜர்

மஞ்சக்கம்பை

நீலகிரி
வேதபுரீசுவரர் புதுச்சேரி புதுச்சேரி
வீரபத்ரசுவாமி விபூதிப்புரம் பெங்களூரு
அகத்தீஸ்வரர் திருச்சுனை மதுரை
தென்திருவாலவாயர் தெற்கு மாசி வீதி, மதுரை மதுரை

சுப்பிரமணிய சுவாமி

புத்தூர், உசிலம்பட்டி

மதுரை
காசிவிஸ்வநாதர் சிவகாசி விருதுநகர்
பக்தஜனேஸ்வரர் திருநாவலூர் விழுப்புரம்
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் பஞ்சவடீ விழுப்புரம்
கிருபாபுரீஸ்வரர் வெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
நிதீஸ்வரர் அன்னம்புத்தூர் விழுப்புரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *