அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம்

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.

இக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் சுக்ரீவர்
தீர்த்தம் சுக்ரீவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவனுக்காக இராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். சுக்ரீவன், இராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலம்.

திருவிழா:

ராமநவமி, வைகுண்ட ஏகாதசி

வேண்டுகோள்:

செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவர்கள் இங்கு வேண்டி மனஅமைதி பெறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *