Category Archives: சிவ ஆலயங்கள்

தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 – 2844 4054

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தீர்த்தபாலீஸ்வரர்
அம்மன் மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கடல்தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல் தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் தீர்த்த பாலீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பது புராணம். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது.

தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம்.

+91-4346 -253599

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தகிரீசுவரர்
அம்மன் வடிவாம்பிகை
தல விருட்சம் பவளமல்லிமரம்
தீர்த்தம் இராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தவசாகிரி
ஊர் தீர்த்தமலை
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனை சம்காரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். இராமன் அனுப்பிய அனுமனால் பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வரத் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வரத் தாமதமாகி விட்டதால் இராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு இராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங்கரையில் விழுந்து, அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து இராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.

இராம பிரான், சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற இராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.