Category Archives: சிவ ஆலயங்கள்

திரு மணிச்சேறை உடையார் கோயில், இஞ்சிமேடு, பெரணமநல்லூர்

அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயில்இஞ்சிமேடு, பெரணமநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மணிச்சேறை உடையார்
தீர்த்தம் சுனை தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இஞ்சிமேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

இமயமலைக்கு நிகராக பெரியமலைஎன்று ஒரு மலை இருந்தது. சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது, சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அவர் தென்பகுதிக்கு வரும் போது இஞ்சிமேட்டில் வான் நோக்கி உயர்ந்திருந்த பெரியமலையின் மீது ஏறி நின்றார். அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்று முதல் பெரிய மலை தென் கயிலாயம்என அழைக்கப்படுகிறது. தரை மட்டமான அந்த பகுதியில், ஒரு முனிவர் நவபாஷாணத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்.

திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம்

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2264 2600, 94447 36290.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரிசூலநாதர்(திரிச்சுரமுடையார்)
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் மரமல்லி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சுரம்
ஊர் திரிசூலம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, இலிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். இலிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை, “சுரம்என்பர். எனவே சிவன், “திருச்சுரமுடைய நாயனார்என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் திரிசூலநாதர்ஆனார்.

கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள், சிவன் அருகில் சொர்ணாம்பிகை இருக்கிறாள். முன்பு பிரதான அம்பிகையாக இருந்த இவள், ஒரு அர்ச்சகரின் கனவில் தோன்றி சொன்னதின் அடிப்படையில், சிவனின் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள்.