கண் பார்வை குறைபாடு நீங்க

கண் பார்வை குறைபாடு நீங்க

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

இத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனிடமும் வேண்டுங்கள். ஆண்டவன் கண் திறப்பான்.

முண்டக கண்ணியம்மன்

மயிலாப்பூர்,சென்னை

சென்னை

மாரியம்மன்

கொழுமம்

கோயம்புத்தூர்

சூலக்கல் மாரியம்மன்

சூலக்கல்

கோயம்புத்தூர்

நித்யசுமங்கலி மாரியம்மன்

ராசிபுரம்

நாமக்கல்

முத்துமாரியம்மன்

தாயமங்கலம்

சிவகங்கை

கவுமாரியம்மன்

வீரபாண்டி

தேனி

ரேணுகாம்பாள்

படவேடு

திருவண்ணாமலை

கோட்டை மாரியம்மன்

சேலம்

சேலம்

கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டை

சிவகங்கை

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

மாரியம்மன்

உடுமலைப்பேட்டை

கோயம்புத்தூர்

இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி

விருதுநகர்

செங்கழுநீர் அம்மன்

வீராம்பட்டினம்

புதுச்சேரி

வீரசேகரர் சாக்கோட்டை சிவகங்கை
கண்ணீஸ்வரமுடையார் வீரபாண்டி தேனி
கைலாச நாதர் காருகுடி திருச்சி
வெள்ளீஸ்வரர் மாங்காடு காஞ்சிபுரம்
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தேவதானம் விருதுநகர்
தூவாய் நாதர் தூவாநாயனார் கோயில் திருவாரூர்
பொன்னம்பலநாதர் (சொர்ணபுரீஸ்வரர்) நல்லாத்தூர் கடலூர்
கண்ணாயிரமுடையார் குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்) நாகப்பட்டினம்
பசுபதீஸ்வரர் பந்தநல்லூர் தஞ்சாவூர்
திருப்பயற்றுநாதர் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
கோலவில்லி ராமர் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர்
இராஜகோபாலசுவாமி மணிமங்கலம் காஞ்சிபுரம்
அரங்கநாதர் மலையடிப்பட்டி புதுக்கோட்டை
வரதராஜப்பெருமாள் பசுபதி கோயில் தஞ்சாவூர்
சுப்ரமணியசுவாமி எண்கண் திருவாரூர்
சாட்சிநாதர் அவளிவணல்லூர் திருவாரூர்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல் திருவாரூர்
நடுதறியப்பர் கோயில் கண்ணாப்பூர் திருவாரூர்
திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்
தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருப்பனங்காடு திருவண்ணாமலை
ஊன்றீஸ்வரர் பூண்டி திருவள்ளூர்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கச்சூர் காஞ்சிபுரம்
புஷ்பரதேஸ்வரர் ஞாயிறு திருவள்ளூர்

5 Responses to கண் பார்வை குறைபாடு நீங்க

  1. கண்ணினைப் பாதுகாக்க அது சம்பந்தமான பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள். முருங்கைப் பூவில் இதுக்கும் பலன் உண்டா?

  2. உண்டு. கூகுளில் தேடுங்கள்

  3. tharaneesh says:

    i like this tips but i want more ideas computer i see means also eye pain coming for that tips

  4. தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *