அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

+91-4577- 264 237

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வளரொளிநாதர்(வைரவன்)
அம்மன் வடிவுடையம்பாள்
தல விருட்சம் ஏர், அளிஞ்சி
தீர்த்தம் வைரவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வடுகநாதபுரம்
ஊர் வைரவன்பட்டி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார். ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காலபைரவர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கல்லுக்குறிக்கை
மாவட்டம் கிருஷ்ணகிரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல்பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.

சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணித் தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன.