அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர்

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369- 270 197, 270 662 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பைரவர்
உற்சவர் சட்டைநாதர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இயந்திரபுரி
ஊர் தகட்டூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத்துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி இலிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+04561 – 221 810, 94420 43493 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 – 12 மணி, மாலை 4 – 7.30 மணி வர திறந்திருக்கும்.

 

பொதுவாக, பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால், காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்என்றும், “தான்தோன்றீஸ்வரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.