காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர்

அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி

+91-413-266 6396

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்காமீஸ்வரர் (காமேஸ்வரர், மிரமீஸ்வரர், நரசிங்கநாதர், நடுவழிநாதர், வைத்திய நாதர், வில்வனேசர் )
அம்மன் கோகிலாம்பிகை(குயிலம்மை, முத்தம்மை)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், ஹிருத்தாப நாசினி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்வநல்லூர்
ஊர் வில்லியனூர்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்டினார். சிவனும்,”தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்எனக் கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார்.

காளத்தியப்பர் கோவில், திருக்கண்டியூர்

அருள்மிகு காளத்தியப்பர் கோவில், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்.


சதாதபர் என்ற முனிவர் பரமசிவனின் பரமபக்தர். எங்கிருந்தாலும் இவர் தனது யோக சக்தியால் தினமும் காலையில் தனுஷ்கோடியிலும், உச்சிக் காலத்தில் கங்கையிலும், மாலையில் திருக்காளத்தியிலும் இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த ஆலயதரிசனங்களை வழிபடத் தவறினால் தீ வளர்த்து அதில் விழுந்து மாண்டு விடுவதாகச் சபதம் செய்திருந்தார். இந்த மூன்று வேளையும் தவிர மற்ற வேளைகளில் மற்ற சிவத்தலங்களை வழிபடச் செல்வார். இப்படி அன்றாடப்பணியே ஆலய தரிசனம்தான் என்று இருந்த சதாதபர் திருக்கண்டியூர் தலத்திற்கு வந்திருந்தார். இத்தலத்தில் சுவாமிதரிசனம் செய்யத் தாமதமானதால் மாலை வேளை வந்துவிட்டது. காளத்தியப்பரை மாலை வேளையில் தரிசிக்காததால் மனம் வருந்தித் தீயில் உயிர்விடத் தீர்மானித்தார். அப்போது, அவர் முன்பு வில்வமரம் ஒன்று தோன்றியது. அதில் சிவபெருமான் உமாதேவியாருடன் காளத்திநாதராகக் காட்சிதந்து சதாதபரை ஆட்கொண்டார்.