காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்

அருள்மிகு காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோயில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளஹஸ்தீஸ்வரர்
அம்மன் ஞானாம்பிகை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கதிர்வேய்ந்தமங்கலம், சிவமல்லிகாவனம்
ஊர் கதிராமங்கலம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

ஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்காக சென்று வருகிறார்கள். அங்கு செல்ல முடியாதவர்கள் இந்த கோயிலில் தர்ப்பணம் செய்து காளஹஸ்தியில் செய்த பலனைப் பெறலாம். “தென் காளஹஸ்திஎன்ற சிறப்பு பெயரும் இவ்வூருக்கு இருக்கிறது.