காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி – திருச்சி
அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி – திருச்சி, திருச்சி மாவட்டம்.
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர் | |
அம்மன் | – | விசாலாட்சி, தையல் நாயகி, காஞ்சி காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி | |
தீர்த்தம் | – | காவிரி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கீழசிந்தாமணி – திருச்சி | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராமாயணத்தில் சீதையை, இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் இராவணனின் தம்பி விபீஷணன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, இராமருடன் சேர்ந்து இராவணனுடன் போர் புரிந்தான். இராமனுக்கு உறுதுணையாக இருந்த குரங்குபடைகள், இந்திரஜித்தின் தாக்குதலில் மயங்கி விழுந்தன. காசியிலிருந்து ஆத்மலிங்கத்தை எடுத்து வந்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என அனைவரும் கருதினர்.
காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435- 244 1095
காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காசி விஸ்வநாதர் | |
அம்மன் | – | குங்குமசுந்தரி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | காவிரி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | உமையாள்புரம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
படைப்புக் கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்” என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார் முருகன். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது.