Category Archives: திருவண்ணாமலை

புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி-புதுக்காமூர்

அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி(புதுக்காமூர்), திருவண்ணாமலை மாவட்டம்.

+91 97891 56179, 96294 73883

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புத்திரகாமேட்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் பவளமல்லி
தீர்த்தம் கமண்டல நதி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தர்மாரண்யஷேத்ரம்
ஊர் ஆரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் இராமர், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீஸ்வரர்என்றே பெயர் சூட்டினார்.

மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை

அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை, கடலாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

+91-94426 72283

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மல்லிகார்ஜுனசுவாமி
அம்மன் பிரமராம்பாள்
தீர்த்தம் பாதாளச் சுனைத் தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பர்வதமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருக்கிறாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்துள்ளனர். சிலைகள் அப்படியே முனீஸ்வரனை ஒத்திருந்தன. மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கவேண்டும். பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்குள் மூச்சு வாங்கும். நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. பாதிதூரம் கடந்ததும், கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது. அதில் பாதிதூரம் சென்றால், வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது. மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே உள்ளன.


ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது. ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்தினாள். அப்படி பொத்தியது சில நொடிகள்தான். அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன. விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும், பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால், சிவபெருமான் பார்வதியை நோக்கி,”நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனைஎன அனுப்பியிருக்கிறார்.