Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர், திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4182-224 387 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன் இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவோத்தூர், திருஓத்தூர்
ஊர் செய்யாறு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர், திருநாவுக்கரசர்

தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். “ஓத்துஎன்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை இங்கு இறைவன் ஓதுவித்தான். சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர்என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர்என்று வழங்கப்படுகிறது. தற்போது திருவத்திபுரம்என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் 9 வாயில்களை கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேடம். இரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதால் பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேரத் தரிசிக்க முடியும். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.

திருக்கரையீஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர்

அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91 94867 26471

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்கரையீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
தீர்த்தம் கோச்செங்கட்சோழன் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பெரணமல்லூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான கோச்செங்கட்சோழன், கட்டிய கோயில் இது. முற்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனையாறு ஓடியது. இதன் கரையில் மன்னன் கோயிலைக் கட்டினான். அம்பாள் திரிபுர சுந்தரிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. கரையில் கோயில் கொண்டதாலும், பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோட்சமாகிய கரைக்கு கரையேற்றி விடுவதாலும் இத்தல சிவனுக்கு திருக்கரை ஈஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.

இரு படையினர் போர் செய்ததால் ஊருக்கு பேரணிமல்லூர்என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர்ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.