Category Archives: திருவண்ணாமலை

அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு

அருள்மிகு அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு: 98432 76679,

94432 24448

பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை.

தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய திருக்கோயில்களுள் ஒன்று இது. பிரமாண்டமான ஒரு நெருப்புக் குழம்பே, பின்னாளில் குளிர்ந்து திருவண்ணாமலையாக மாறியது என்கிறது புராணம். இங்கு குடி கொண்ட இறைவனார் அருணாசலேஸ்வரர் என்றும் அண்ணாமலையார் என்றும் ஆதி காலத்தில் இருந்தே வணங்கப்பட்டு வருகிறார். இந்த அக்னி மலையையே சிவ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள் பக்தர்கள். எனவேதான், இந்த மலையை வலம் வந்து வணங்குவது சிறப்பு.

அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில்,
திருவண்ணாமலை
, திருவண்ணாமலை மாவட்டம்

மூலவர் ஆதி அருணாசலேஸ்வரர்
அம்மன் ஆதி அபீதகுஜாம்பாள்
ஊர் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் – 1.
ஓதிமா மலர்கள்
… (4-63-…)
திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது ; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.