Category Archives: சிவ ஆலயங்கள்

காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 244 1095

காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் குங்குமசுந்தரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் உமையாள்புரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைப்புக் கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார் முருகன். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம்

அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம் மதுரை, மதுரை மாவட்டம்.

+91 452 237 1909, 97895 98380, 90438 46451

காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பழங்காநத்தம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் சிறப்பாக நடந்தது. விஷ்ணு தாரை வார்த்து கொடுக்க, பிரம்மா சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த தெய்வீகத் திருமணத்தை காண வந்தவர்களில் பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் அடங்குவர். இவர்கள் இருவரும் தினமும் சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவனின் நடனத்தை பார்த்த பின் தான் உணவருந்துவதைக் கடமையாக கொண்டிருந்தனர். இப்போது மதுரையில் இருப்பதால், அவர்களது விருப்பப்படி வெள்ளியம்பலத்தை தோற்றுவித்து அதில் நடனமாடினார் சிவன். இந்த திருநடனத்தை தரிசித்தபின்தான் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சாப்பிட்டனர். பின்னர் பதஞ்சலி மகரிஷி ஒரு வில்வமரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்தார்.