Category Archives: சிவ ஆலயங்கள்

காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 253 921, +91- 98423 31372

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசிநாதசுவாமி (காசிபநாதர்), எரித்தாட்கொண்டார்
அம்மன் மரகதாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அம்பாள்சமுத்திரம்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய இலிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த இலிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, “காசிபநாதர்என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், “காசிநாதர்என மருவியது.

காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி – திருச்சி

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி திருச்சி, திருச்சி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
அம்மன் விசாலாட்சி, தையல் நாயகி, காஞ்சி காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம் காவிரி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கீழசிந்தாமணி திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இராமாயணத்தில் சீதையை, இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் இராவணனின் தம்பி விபீஷணன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, இராமருடன் சேர்ந்து இராவணனுடன் போர் புரிந்தான். இராமனுக்கு உறுதுணையாக இருந்த குரங்குபடைகள், இந்திரஜித்தின் தாக்குதலில் மயங்கி விழுந்தன. காசியிலிருந்து ஆத்மலிங்கத்தை எடுத்து வந்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என அனைவரும் கருதினர்.